ஞாயிறு, 27 ஜூன், 2010

மக்கள் மையம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு

மக்கள் மையம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
ஊட்டி, ஜூன் 26:
மக்கள் மையங்கள் அமைக்க விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் மற்றும் மக்கள் மையம் தலைவர் சிவசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் உந்துனர் அறக்கட்டளை சார்பில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மையங்கள் செல்படுத்தப்பட்டு வருகிறது. இம்மையத்தின் நோக்கம், மக்களாட்சியில் மக்களை மையப்படு த்துவதாகும். மக்களை மையப்படுத்துவதற்கு குடிமக்களுக்கு அறிவும், துணிவும், பரிவும் கொண்டவர்களாக மாற்ற வேண் டும்.

மக்கள் மையப் படுத்தப்பட்டால் தான் மக்களாட்சி தழைத்து ஆட்சியின் தரம் உயரும். இதை செயல்படுத்தவே மக்கள் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பல அரசு நலத்திட்டங்கள் அரசுக்கு நற்பெயர் பெற வேண்டுமென செயல்படுத்தப்படுகிறது. மக்கள் நலனுக்கு இயற்றப்படும் பல சட்டங்களும், திட்டங்களும் கடைசி தர மக்களுக்கு சென்றடைவது இல்லை.

அரசின் திட்டங்கள் அணுகி பெறவும், சட்டங்கள் அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு பெற்றவர்களாக மாற்றவும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும்போது நிவாரணம் பெறும் நடைமுறைகளையும், சுய முன்னேற்றத்திற்கு வழிகாட்டல்களையும் வழங்க கூடிய இடமாக மக்கள் மையங்கள் செல்படுகின்றன.

மக்கள் மையம் தகவல்களை திரட்டி மக்களுக்கு வழங்கும் தகவல் மையமாகும்.

பலதரப்பட்ட செய்திகள், நாட்டு நடப்புகள், உரையாடல்கள் மூலம் பரப்பி வரும் உரையா டல் மையங்களாகும்.

அரசு திட்டங்கள், பாதிப்புக்கு நிவார ணம் பெறும் வழிமுறைகள் மக்களுக்கு தேவையானவற் றை பெற உதவும் வழிகாட்டும் மையமாகவும்,

குறை களை களைய உரிய முயற்சிகள் மேற்கொள்ள மக்களை திரட் டல் உள்ளிட்டவை செய்யும் செயல்மையமாகவும் உள்ளது.

இதுபோன்று செயல்பட விரும்பும் தன்னார்வ அமைப்புகள் மக்கள் மையம் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்போர் தங்களது அமைப்பின் பெயர், முகவரி, செயல்பாடுகள் குறித்த விவரங்களோடு விண்ணப்பிக்கலாம். 30ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.


விண்ணப்பங்கள் மக்கள் மையங்களின் திட்ட அலுவலரால் பரிசீலிக்கப்பட்டு மாவட்ட குழு நேரடி ஆய்வுக்கு பின் மக்கள் மையம் அமைக்க பரிந்துரைக்கப்படும்.

ஜூலை 25ல் திருச்சியில் நடக்கும் மாநில மக்கள் மையங்களின் மாநில மாநாட் டில் இறுதி முடிவெடுத்து அமைக்க அனுமதி அளிக்கப்படும்.


‘மக்கள் மையம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், வணிக வளாகம், பந்தலூர். மேலும்

மக்கள் மையம், வசம்பள்ளம், ஓட்டுப்பட்டறை, குன்னூர்.

மக்கள் மையம், ஜெயா காம்ளக்ஸ், நொண்டி மேடு, ஊட்டி’

என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

வணக்கம்

வணக்கம்


நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு
FEDERATION OF CONSUMER ORGANIZATION IN NILGIRIS

வசம்பள்ளம் ஓட்டுபட்டரை, குன்னூர் நிலகிரி

உங்களை அன்புடன் வரவேற்கிறது


பெருந்தலைவர்
கிருஷ்ணசாமி

துணை பெருந்தலைவர்
சு. சிவசுப்ரமணியம்
94 88 520 800


பொது செயலாளர்
க. வீரபாண்டியன்
93453 98085