சனி, 12 அக்டோபர், 2013

1.நீலகிரி தேயிலையில் கலக்கப்படும்சாயங்களால் அபாயம் :பள்ளியில் நடந்த கருத்தரங்கில் "பகீர்'


பந்தலூர் : "கலப்பட சாயங்கள் தேயிலையில் சேர்க்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியான தேநீர் அதன் தன்மையை இழந்து, நோய் உருவாக்கும் பானமாக மாறுகிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலை வாரியம் குன்னூர், நுகர்வோர் பாதுகாப்பு மையம், புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து, பந்தலூரில் தேயிலை விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்தின. பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்ட்டின் வரவேற்றார். நுகர்வோர் மைய தலைவர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ""நீலகிரியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் தேயிலையில் கலப்படத்தை தடுக்கவும், தேயிலை தொழிலில் புதிய யுக்திகளை கையாளவும், பல வழிமுறைகள் மேற்கொள்ளப்படுவதை மாணவர்கள் தெரிந்துக்கொண்டு பயன்பெற வேண்டும்,'' என்றார்.
தேயிலை வாரிய இணை இயக்குனர் ஹரிபிரசாத் பேசுகையில்,
""இந்தியாவில் 1100 மில்லியன் கிலோ தேயிலை உற்பத்தி செய்வதில், 250 மில்லியன் கிலோ தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படுகி றது. இதில், 80 சதவீத தேயிலைத்தூளை உள்ளூரிலும், 20சதவீத தூள் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. மாநிலமும் முழுவதும், தேயிலை கலப்படத்தை தடுக்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,'' என்றார்.
உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் ரவி பேசுகையில்,""கடந்த 1800வது ஆண்டிலேயே தேயிலையில் கலப்படம் துவங்கிய நிலையில், தற்போதைய கால கட்டத் தில் இத்தகைய செயல்கள் அதிகரித்து விட்டன. 5 வகையான கலப்பட சாயங்கள் தேயிலையில் சேர்க்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தியான தேநீர் அதன் தன்மையை இழந்து, நோய் உருவாக்கும் பானமாக மாறுகிறது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் கலப்பட தேயிலை, கலப்படமற்ற தேயிலை கண்டறியும் வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.
வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், தொழிற்சாலை நல அலுவலர் அனில்குமார், பள்ளி தலைமையாசிரியர் செலீன், அரசுமேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தண்டபானி, சேரன் டிரஸ்ட் நிர்வாகி தங்கராஜா, காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத் உட்பட பலர் பங்கேற்றனர். மைய செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.









pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

மின் உற்பத்தி, பகிர்மானம், வழங்குதல் துறைகளில் வருகிறது மாற்றம்

புதுடில்லி: மொபைல் போன் வாடிக்கையாளர்கள், இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மாற்றிக் கொள்வது போல், மின் நுகர்வோரும், விரைவில், தாங்கள் விரும்பும் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை வாங்கிக் கொள்ள முடியும். சிறந்த சேவையை எந்த நிறுவனம் வழங்குமோ அந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை பெற்று பயன்படுத்திக் கொள்ள வகை செய்யும் திட்டம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

வெளிநாடுகளில்:

அமெரிக்கா, நியூசிலாந்து, பிரிட்டன் போன்ற பல நாடுகளில், மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் வழங்குதல் துறை, தனியார் வசம் உள்ளது. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம், பகிர்மானத்தை மற்றொரு நிறுவனத்திடம் வழங்குகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து, பல சிறு நிறுவனங்கள் அல்லது உள்ளூர் நிறுவனங்கள், மின்சாரத்தை பெற்று, வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் வழங்குகின்றன. இத்தகைய முறையால், போட்டி ஏற்பட்டு, தரமான மின் வினியோகத்துடன் கூடிய மின் சேவை, நுகர்வோர்களுக்கு கிடைக்கிறது. இந்த முறையில், மின் நுகர்வோர் விரும்பினால், தங்களுக்கு சேவை வழங்கும் நிறுவனத்தை, இஷ்டம் போல் மாற்றிக் கொள்ள முடியும். இதனால், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டு, பிற நிறுவனங்களுக்கு சென்று விடக் கூடாது என்பதற்காக, தரமான விதத்தில் மின் சேவை வழங்க, நிறுவனங்கள் முன்வரும். இந்த புரட்சிகரமான மின் சப்ளை முறை, விரைவில் நம் நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இளைஞரான, ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான, மத்திய மின்துறை, இந்தத் திட்டத்தை செயல்படுத்த துடிப்புடன் செயல்படுகிறது. முதற்கட்டமாக, அனைத்து மாநில மின்துறை உயரதிகாரிகளை அழைத்து, இந்த முறையை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன, அதனால், நுகர்வோர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் எந்த அளவுக்கு, அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.


மின் தட்டுப்பாடு:


அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட, மாநில அதிகாரிகள் பெரும்பாலானோர், 'போதிய மின் உற்பத்தி இல்லாமல், மின் தட்டுப்பாடு நிலவும் நேரத்தில், இத்தகைய திட்டம் எவ்வாறு செயல்படுத்த முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு அதிகாரிகள், 'மின் பற்றாக்குறை இப்போதைய, குறுகிய கால பிரச்னை தான்; அது, விரைவில் தீர்க்கப்பட்டு விடும். மின் உற்பத்தி மிகையாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதனால், இப்போதைக்கு, மிகை உற்பத்தி மாநிலங்களின் முக்கிய நகரங்களில், இந்தத் திட்டத்தை செயல்படுத்திப் பார்ப்போம். அதில் கிடைக்கும் விவரங்களின் அடிப்படையில் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்' என தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் எவ்வாறு இருக்கும் என, மத்திய அரசு தெரிவித்துள்ள, குறிப்புகளின் அடிப்படையில், கீழ்கண்ட தகவல்கள் தெரிய வருகின்றன.

* எந்த நிறுவனத்திடம் இருந்து மின் சேவை பெறுவது என்ற தெரிவு, நுகர்வோர் வசம் வரும். ஒரே நிறுவனத்தையே காலம் காலமாக சார்ந்திருக்கத் தேவையில்லை. விரும்பினால், சேவை வழங்கும் நிறுவனத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளலாம்.

* எவ்வளவு மின்சாரம் வேண்டுமானாலும், பயன்படுத்திக் கொள்ளலாம்; கட்டுப்பாடுகள் இருக்காது. அதிக பயன்பாட்டிற்கு, குறை வான கட்டணம் கூட கிடைக்கலாம்.

* மின் உற்பத்தி, மின் பகிர்மானம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்குதல் போன்ற பிரிவுகளில், ஏராளமான தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கும்.

* மொபைல் போன் சேவை போல், ஒவ்வொருவரும், தனித்தனி இணைப்பு வசதிகள் ஏற்படுத்த தேவையில்லாமல், பொதுவான அமைப்பிடம் மின்சாரத்தை பெற்று, பிரித்து வழங்குவர்.

* கட்டணம், ஒரே சீராக இருக்காது; நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியால், அதில் மாற்றங்கள் இருக்கும். கட்டுப்படியான நிறுவனத்தை, நுகர்வோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

* நிறுவனங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என்பதால், தரமான மின் சேவை, நுகர்வோருக்கு கிடைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.


டில்லி, மும்பை:


இப்போதைய நிலையில், டில்லி மற்றும் மும்பை நகரங்களில் மட்டும் தான், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவது தனியார் வசம் உள்ளது. பிற நகரங்களில், இந்த சேவையை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தான் வழங்கி வருகின்றன. அவற்றில் பல பிரச்னைகளும், புகார்களும் இருப்பதால், மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய திட்டம், அதிக வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.


தமிழகத்தில் நிலைமை என்ன?


ஜி.எம்.ஆர்., நிறுவனத்துக்கு, சென்னையில், பர்னஸ் ஆயில் மூலம், 200 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. நாகை மாவட்டத்தில், பிள்ளைபெருமாள் நல்லூர் நிறுவனத்திற்கு, 330 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. இந்தஅளவுக்கு தான், தமிழகத்தில், தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களின் நிலைமை உள்ளது. மின்உற்பத்தி, பகிர்மானம் மற்றும் வழங்கலுக்கு, மின் வாரியத்தில் தனித்தனி பிரிவுகள் உள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய மின் நிறுவனங்கள், தனித்து, பணிகளை மேற்கொள்கின்றன. அணு, அனல், புனல் என, மூன்று வகையான மின் உற்பத்தி நிலையங்கள், தமிழகத்தில் இருக்கும் நிலையிலும், மின் பற்றாக்குறை அபரிமிதமாகவே உள்ளது. மின் மிகை மாநிலமாக மாறும் போது, மேற்கூறிய திட்டம், தமிழகத்தில் அறிமுகமாகும் போது, சிறப்பான வரவேற்பு இருக்கவே செய்யும் என, மின் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
















pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/

தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

பந்தலூர் பாரிஸ் ஹாலில் தரமான தேயிலை மற்றும் தேயிலையின் பயன்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது

குன்னூர் தென் இந்திய  தேயிலை  வாரியம், கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல்   பாதுகாப்பு மையம், பந்தலூர் புனித சேவியர் பெண்கள் பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சசூழல் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்

பள்ளி தலைமை ஆசிரியர் செலின் தாளாளர் ஜான்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியை பந்தலூர் வட்டாச்சியர் இன்னாசிமுத்து துவக்கி வைத்து பேசிய பொது    இந்தியாவில்    தேயிலைத் தொழில் சுமார் 200ஆண்டுகளுக்கு மேல்   பழமையானது ஆகும். உலகில் மிகப் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது.   இப்பகுதி மக்கள் தேயிலையை நம்பியே வாழ்கின்றனர் நல்ல தேயிலை பல்வேறு பயன்களை தருகின்றது. விளம்பர பானங்களை தவிர்த்து தேயிலையை அதிகம் பயன் படுத்த வேண்டும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட  தென்னிந்திய தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரி பிரகாஷ்  பேசும் பொது   தேயிலை தொழில் பல்வேறு மக்களின் வாழ்வாதாரம் ஆகும்.  அசாம் தேயிலை, டார்ஜிலிங் தேயிலை, தமிழகத்தின் நீலகிரித் தேயிலை ஆகியவை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றவையாகும்.  தேயிலையில் கறுப்புத் தேயிலை. பச்சைத் தேயிலை வெண்மைத் தேயிலை என பல வகைகள் உள்ளன. தேநீரின் நிறத்தைப் பொருத்து ,இவை இவ்வாறு பிரிக்கப்படுகின்றன.தேயிலை, உடல் நலத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் நன்மை செய்யக்கூடியதாகும். தேயிலை தயாரிப்பு குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து  மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த தேயிலை வாரியம் முடிவு செய்துள்ளது என்றார்.

தேயிலை கலப்படம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்  மருத்துவர் ரவி பேசும்போது
தேயிலையில் கலப்படம் செய்யும் போது அதன் தன்மை மாறி விடுகின்றது இதனால் தேயிலையின் நல்ல பயன்கள் மாறி பாதிப்பு   ஏற்படுத்துகின்றது. தேயிலை தூள் வாங்கும்போது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தகவல்கள் பார்த்து வாங்கினால்  தரமான தேயிலை கிடைக்கும் என்றார்.

பச்சைத் தேயிலையை உட்கொண்டால் சில வகைப் புற்று நோய், அல்சிமர் நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உலகம் முழுவது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தேயிலையின் பயன்கள் குறித்து பேசிய உபாசி திட்ட அலுவலர் சிவகுமார் போசும்போது  தேயிலை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது  சீனாவிலும் ஜப்பானிலும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் நீண்ட நாள் வாழத் தேயிலைத் துணை புரிவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தேநீர் பருகுவதால் உடல் சோர்வும் , களைப்பும் நீங்கிப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அத்துடன் சுறு சுறுப்பாகவும், துடி துடிப்புடன் திகழவும் தேநீர் உதவுகிறது. தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள். குறைவான கொழுப்புஅளவு ஆகியவற்றால் இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. தேநீர் தோல் புற்று நோய்வராமல் தடுப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தேயிலையில் உள்ள சத்துக்கள் பல் ஈறுகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது. கறுப்புத் தேநீர் பருகுவது இதயம் மற்றும் ஈரல் நோய்களைத் தடுப்பதாக சில ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. உடல் எடை குறைக்கவும் தேயிலை உதவுகிறது.என்றார்

தொடர்ந்து தேயிலையின் தரம் குறித்து சுனில் குமார் பேசினார்

வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் பந்தலூர் அரசு பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணப்பாளர் தண்டபாணி காந்தி சேவை மைய அமைப்பாளர் நௌசாத் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர்  கொண்டனர்

முன்னதாக பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மார்டின் வரவேற்றார்

முடிவில் நுகர்வோர் மைய செயலாளர் கணேஷன் நன்றி கூறினார் 

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்   pls visit our webs  http://cchepnlg.blogspot.in/    http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/