சனி, 18 அக்டோபர், 2014

உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை உணவும்

உதகை அருகே சிவசைலம் சாம்ராஜ் மேல்நிலை பள்ளியில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு உணவு பாதுகாப்பும், இயற்கை  உணவும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம், நீலகிரி  மாவட்ட நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு  ஆகியன இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார்.  பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் முருகன் முன்னிலை வகித்தார்.  பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவி சந்தியா வரவேற்றார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்பிரமணியம் பேசும்போது
உணவு பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று நம்மை நோயாளிகளாக மாற்றி வருகிறது.  விளம்பரங்களில் வரும் உணவுகளையும் ஊட்டசத்து பாணங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றோம்.  இவற்றினால் எந்த பயனும் இல்லை. அதுபோல பதப்படுத்தபட்ட உணவுகள்,   ரெடிமேட் உணவுகள் பலவற்றிலும்  கெடாமல் இருக்க சேர்க்கப்படும் இரசாயனங்கள் உடலுக்கு பதிப்பையும் நோயினை உருவாக்கும் தன்மையையும் கொண்டுள்ளது.  நொறுக்கு தீனியாக உண்ணக்கூடிய சிப்ஸ், லேஸ் உள்ளிட்டவைகளினால் இதய கோளாறுகள் மற்றும் கேன்சர் வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.  எனவே  இவற்றை தவிர்த்து சாதாரண உணவுகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.   http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/
நெஸ்ட் அறக்கட்டளை அறங்காவலர் சிவதாஸ் பேசும்போது   தற்போது  சைவ உணவுகளை தவிர்த்து அசைவ உணவுகளை அதிகம் உண்ணுகிறோம்.  கோழி ஆடு மாடு உள்ளிட்டவைகளை உணவுக்கு வளர்க்க செலவிடும் உணவு வகைகள் அளவுகள் மக்கள் பலருக்கு உணவு அளிக்க முடியும்,  மேலும் தற்போது உணவுக்கு வளர்க்கபடுபவை மருந்துகள் இட்டு வளர்க்கபடுகிறது இவை மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக உள்ளது. சிறு தானிய உணவுகள், தாவர உணவுகள் அதிக பயன்கள் தரக்கூடியது என்றார்.
நிலகிரி நுகர்வோர் கூட்டமைப்பு செயலாளர் வீரபாண்டியன் பேசும்போது இயற்கை உணவுகளில் மட்டுமே அதிக ஊட்ட சத்துகள் உள்ளது.  உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளையும் பெறலாம்.  உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, கலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனம், ஊட்டசத்து விவரங்கள், சேர்க்கபட்டுள்ள பொருட்களின் விவரங்களை பார்த்து வாங்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் நுகர்வோர் மன்ற மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி குடிமக்கள்  நுகர்வோர் மன்ற மாணவன் கோகுல் நன்றி கூறினார்.
pls visit our webshttp://cchepnlg.blogspot.inhttp://cchepeye.blogspot.inhttp://consumernlg.blogspot.in/

கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,

கூடலூர் :"நுகர்வோர்களிடம் வசூல் செய்யும் கேபிள் இணைப்பு கட்டணத்துக்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் மாவட்ட கலெக்டருக்கு  அனுப்பியுள்ள மனு:

கடந்த 2011 ஆண்டு முதல் மாநில அரசு,கேபிள் கார்ப்பரேஷன் துவங்கி குறைந்த கட்டணத்தில் கேபிள் சேவை வழங்கி வருகிறது. "கேபிள் இணைப்புக்கு மாத கட்டணம் 70 ரூபாய் வசூல் செய்து, அதில் 20 ரூபாய் அரசுக்கு செலுத்த வேண்டும்; முதலில் 90 சேனல்கள் ஒளிபரப்ப வேண்டும்,' என தெரிவிக்கப் பட்டது. தற்போது 120 சேனல்கள் வரை  வழங்க அரசு வலியுறுத்தி வருகிறது.  
ஆனால், பல பகுதிகளில் குறைந்த சேனல்கள் வழங்குவதுடன், அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்துக்கு பதில் மாதம் 100 ரூபாய் கட்டாய வசூல் செய்யப்படுகிறது.
நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பல பகுதியில் இதே நிலை தொடர்கிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் கட்டணத்துக்கு ரசீது வழங்க வேண்டும் என தமிழ்நாடு கேபிள் டிவி கழகம் அறிவுறுத்தி அதன் மாதிரியும் அனைத்து ரேசன் கடைகளிலும் ஒட்டி வைக்க பட்டுள்ளது ஆனால் இதுவரை யாரும்  ரசீது  வழங்குவதில்லை.  பல செய்தி சேனல்கள் மற்றும் விளையாட்டு சேனல்கள் இருட்டிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்ப படுகிறது.  உள்ளூர் சேனல்கள் அதிக அளவில் ஒளிபரப்பபடுகிறது. 
எனவே, நீலகிரியில் செயல்படும் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள், அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூல் செய்து, அதற்கு அரசு கேபிள் "டிவி' கார்ப்பரேஷன் சார்பில் ரசீது வழங்கவும்; அனைத்து சேனல்களையும் முறையாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இதே செயல்கள் தொடரும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை செய்யப்படும். இவ்வாறு சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.




கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்pls visit our webs http://cchepnlg.blogspot.in/ http://cchepeye.blogspot.in/ http://consumernlg.blogspot.in/