திங்கள், 23 ஜூலை, 2012

கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் nov 2011

ஊட்டி : கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. நீலகிரி மாவட்ட நுகர்வோர் குழு கூட்டமைப்பு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் சார்பில் செயல்படும் கிராம நுகர்வோர் மன்றங்களின் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். செயலாளர் வீரபாண்டியன், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முன்னிலை வகித்தனர். மன்ற அமைப்பாளர்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து பேசினர். எதிர்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 
  உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய  
 நீலகிரியில் மோசமாக உள்ள பெரும்பாலான கிராம சாலைகளை சீரமைக்க வேண்டும்; ஊட்டி நகர் பகுதிகளில் மழைநீர்கால்வாய்கள் தூர் வாரப்படாமல் உள்ளதால் மழை காலங்களில் நீர்தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்; 
 
மருத்துவ துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்து நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; 
 
ஊட்டி நகராட்சி, போக்குவரத்து கழகம் ஆகியவை கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதுடன், சுகாதாரமான முறையில் இருக்க கண்காணிக்க வேண்டும்; 
 
சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பகுதிகளில் கூடுதல் கழி பிடங்கள் கட்ட வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 
அமைப்பாளர் ரமேஷ் வரவேற்றார். 
 
ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.